மேகதாது விவகாரம்: கர்நாடக அமைச்சருக்கு சட்டப்படி பதிலடி தந்த அமைச்சர் துரைமுருகன்
மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடகா சொல்வதை போல, அதை எந்தநிலையிலும் சட்டப்படி தடுத்தே தீருவோம் என்று சொல்வதற்கு எங்களுக்கு உரிமை உண்டு: தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கூறிய கர்நாடக அமைச்சருக்கு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சரியான சட்டப்படி பதிலடி தந்துள்ளார். எந்த நிலையிலும் மேகதாது அணை கட்டப்படுவதைச் சட்டப்படி தடுத்தே தீருவோம் என அமைச்சர் துரைமுருகன் தெளிவுப்படுத்தி உள்ளார்.
இன்று தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில் மேகதாதுவில் (Mekedatu project) அணை கட்டுவதற்கு எதிராக மூன்று முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை (Karnataka Law Minister Basavaraj Bommai), "மேகதாது அணையை கட்டியே தீருவோம். ஒன்றிய அரசிடம் முறையாக அனுமதி பெற்று மேகதாது அணை கட்டப்படும். இதில் எந்தவித மாற்றமும் இல்லை. மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை. மேகதாது அணையை கட்டுவதை எந்த காரணம் கொண்டும் நிறுத்த போவதில்லை" என்று பிரச்னையை பெரிதாகும் நோக்கில் பேசியிருந்தார்.
ALSO READ | மேகதாது அணை பிரச்சனை: அனைத்து கட்சி கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள்
அவரின் அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் (TN Water Resources Minister Durai Murugan), "மேகதாதுவில் அணை கட்டுவதை சட்டப்படி தடுத்தே தீருவோம். மேகதாதுவில் அணையை கட்டுவோம் என்று கர்நாடக அமைச்சர் பசவராஜ் பொம்மை சொல்வது, நடுவர் மன்ற தீர்ப்பையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் நாங்கள் மதிக்கமாட்டோம் என்று சொல்வது போல் தெரிகிறது. இது ஒரு ஜனநாயக நாடு. ஒரு மாநிலத்தின் இத்தகைய போக்கை மத்திய அரசு பார்த்துக்கொண்டு இருப்பது நல்லதல்ல. மேலும் அண்டை மாநிலதின் உறவிற்கும் இது உகந்ததல்ல.
மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடகா சொல்வதை போல, அதை எந்தநிலையிலும் சட்டப்படி தடுத்தே தீருவோம் என்று சொல்வதற்கு எங்களுக்கு உரிமை உண்டு என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.