திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த ராஜாதோப்பு பகுதியில் சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி ஆஸ்ரமம் அமைத்து அன்னபூரணி அரசு அம்மா என்ற பெண் சாமியார் பொதுமக்களுக்கு ஆன்மீக சொற்பொழிவை ஆற்றி வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன்பு சர்ச்சையில் சிக்கினார். பட்டுப்புடவை, நகைகள் என புல் மேக்கப்பில் இவர் அமர்ந்திருக்க, இவரது பக்தர்கள் இவரிடம் குறி கேட்கும் வீடியோ வெளியாகி வைரலானது. அதன்பின்னர் தான் இவர் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தெரியவந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன் பின்னர் இவரை பலரும் கலாய்த்து பதிவிட்டு வந்தனர். ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் இவர் ஆன்மீக கூட்டங்களை நடத்தி வருகிறார்.  இந்நிலையில் ஆடி மாதத்தை முன்னிட்டு அன்னபூரணி அரசு அம்மன் வேடத்தில் புல் மேக்-அப்பில் தோன்றினார். அவருக்கு அவரது பக்தர்கள் கற்பூரம் காட்டியும், பாத பூஜை செய்தும், மலர் பூஜை செய்தும் வழிபட்டனர். 



மேலும் படிக்க | மது அருந்த பணம் இல்லாததால் ஏ.டி.எம்-ஐ உடைத்த ஆசாமி!


தன்னை ஆதிபராசக்தியின் மறு அவதாரம் எனக் கூறி, பக்தர்களுக்கு இவர் ஆசி வழங்கி வருகிறார். இதை தொடர்ந்து யூடியூப்பில் ஆன்மீக சொற்பொழிவை நடத்தி வந்தார். பல்வேறு மாவட்டங்களிலிருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு ஆசி பெற்றனர். நித்தியானந்தாவும் முதலில் திருவண்ணாமலையில் தான் ஆசிரமம் நடத்தி வந்தார். பின்னர் அவர் மிகப்பெரிய ஆளாக வளர்ந்தார். ஒருவேளை அன்னபூரணி அம்மாவும் அவர் வழியில், திருவண்ணாமலையில் ஆசிரமம் அமைத்துள்ளார் போல என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.