சென்னை மாரத்தான் ஓட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளதையொட்டி சென்னை மெட்ரோ ரயில் நாளை 3 மணி முதல் சேவையை வழங்க உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அனைவரும் உடல் நலனை ஆரோக்கியமாக பராமரிப்பது தொடர்பான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் ஒரு பகுதியாக சென்னை ரன்னர்ஸ் உடன் இணைந்து நாளை சென்னை மாரத்தான் ஓட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.


இதனால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு பதிலாக அதிகாலை 3 மணி முதல் ரயில் சேவையை வழங்க உள்ளது.


மெட்ரோ ரயில் நிலையங்களிலும் வாகன நிறுத்தும் இடங்களை பங்கேற்பாளர்களுக்கு மட்டும் இலவசமாக வழங்குகிறது. அனைத்து ஓட்டப் பந்தயங்களும் நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இருந்து தொடங்கும். 10 கிலோ மீட்டர் தீர ஓட்டப் பந்தயம், தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரிக்கு அருகில் முடிவடையும். மற்ற ஓட்டப்பந்தய பிரிவுகள் கிழக்கு கடற்கரை சாலையில் முடிவடையும்.


மாரத்தான் 10 கிலோ மீட்டர், 21 கிலோ மீட்டர், 32 கிலோ மீட்டர் மற்றும் 42 கிலோ மீட்டர் என 4 பிரிவுகளாக நடத்தப்படுகிறது.



உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.