கரைபுரளும் காவிரி: “முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை”
மேட்டூர் அணைக்கு நீர்மட்டம் 119.41 கன அடியை தாண்டியது. மகிழ்ச்சியில் விவசாயிகள்!!
மேட்டூர் அணைக்கு நீர்மட்டம் 119.41 கன அடியை தாண்டியது. மகிழ்ச்சியில் விவசாயிகள்!!
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்துவருவதால் தமிழகத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகளில் நீர் மட்டம் கிடு கிடு என உயர்ந்து வருகிறது.
இதையடுத்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 அடியில் இருந்து 119.41 அடியாக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 64,595 கன அடியில் இருந்து 68,489 கன அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் தற்போது நீர்மட்டத்தின் இருப்பு அளவானது சுமார் 92.53 டிஎம்சி ஆக உயர்ந்துள்ளது.
இதை தொடர்ந்து குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 30,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதிக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, மேட்டூர் அணை நீர்மட்டம் எப்போது வேண்டுமானாலும் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அணையின் நீர்மட்டம் பிற்பகல் 12 மணி அளவில் முழு கொள்ளளவை எட்டும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், 16 கண் மதகுகளில் திறக்கப்படும் நீரின் அளவு 8,000 கன அடியில் இருந்து 10,000 கன அடியாக உயர்த்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.