மேட்டூர் அணையின் நீர்மட்டம் 83.20 அடியாக உயர்வு!!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியில் இருந்து 83.20 அடியாக உயர்ந்தது!!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியில் இருந்து 83.20 அடியாக உயர்ந்தது!!
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்துவருவதால் தமிழகத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகளில் நீர் மட்டம் கிடு கிடு என உயர்ந்து வருகிறது.
இதையடுத்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 46,613 கன அடியிலிருந்து 45,316 கன அடியாக குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 83.20 அடியாக உள்ளது. மேட்டூர் அணையின் தற்போது நீர்மட்டத்தின் இருப்பு அளவானது சுமார் 45.22 டிஎம்சி ஆக உள்ளது.
இதை தொடர்ந்து குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.