மகிழ்ச்சி!! எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் மருத்துவ அறிக்கை
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் என மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை: மில்லியன் கணக்கான ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியை, புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகனும் மருத்துவமனையும் அறிவித்துள்ளது. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு (S. P. Balasubrahmanyam) அளித்து வரும் சிகிச்சை மூலம் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மற்றும் மருத்துவமனையின் மருத்துவக் குழுவால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவதாகவும் அவரது மகன் எஸ்.பி. சரண் (SP Charan) ஒரு வீடியோ செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் மருத்துவமனையும் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து அவர் ஐ.சி.யுவில் வென்டிலேட்டர் மற்றும் ஈ.சி.எம்.ஓ ஆதரவில் இருப்பதாகவும் மருத்துவமனை (Hospital Bulletin) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ALSO READ | பாடகர் SPB-யின் கொரோனா பாதிப்புக்கு நான் தான் காரணமா? பிரபல பாடகி விளக்கம்
மேலும் இன்று அவரது மகன் வெளியிட்ட வீடியோவில், "அவர் நேற்று முன்பு இருந்ததை விட மிகச் சிறப்பாக இருக்கிறார். நுரையீரலில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மயக்கமின்றி அவர் சுகமாக இருக்கிறார். அவர் குணமடைய முதல் படி வெற்றி பெற்றுள்ளதால் மருத்துவர்கள் மகிழ்ச்சியடைந்து இருக்கிறார்கள்" என்று அவரது மகன் ஒரு வீடியோவில் கூறினார்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடிய 74 வயதுடையவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். கடந்த 5 ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | SPB உடல் நலம் பற்றிய தவறான தகவலை பரப்ப வேண்டாம்: மகன் சரண் கோரிக்கை