கேரள மாநிலம் பாலக்காட்டில் புனரமைக்கப்பட்ட எம்ஜிஆர் நினைவு இல்லத்தை நாளை ஆளுநர் சதாசிவம் திறந்து வைக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வடவனூர் ஆகும். சிறுவயதில் இங்கு எம்ஜிஆர் குடும்பத்தோடு வசித்தார். இந்த வீட்டை எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி 2 முறை பராமரித்தார். அதன் பின்னர் அந்த வீட்டை யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் வீடு சிதிலமடைந்து குடியிருக்க முடியாமல் இருந்தது.


இது குறித்து அறிந்த சென்னை முன்னாள் மேயரும், எம்ஜிஆர் பேரவைத்தலைவருமான சைதை துரைசாமி அந்த வீட்டை பார்வையிட்டார். எம்ஜிஆர் வசித்த வீட்டை புனரமைக்க முடிவு செய்தார். அதன்படி ரூ.50 லட்சம் செலவில் சிதிலமடைந்த வீட்டை புதுப்பொலிவுடன் மாற்றி எம்ஜிஆர் நினைவு இல்லமாக அமைக்கப்பட்டது.


இதுகுறித்து எம்ஜிஆரின் சகோதரரின் பேரன் கூறும்போது, எம்ஜிஆரின் நினைவு இல்லத்திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இந்த இல்லத்தை கேரள கவர்னர் சதாசிவம் திறந்து வைக்கிறார்.