18:16 05-03-2018
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது நிகழ்ச்சி. தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டவுடன் அனைவரும் எழுந்து நின்று மரியாதையை செலுத்தினர்.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



17:50 05-03-2018
எம்.ஜி.ஆர்-ன் வெண்கல சிலையை திறந்து வைத்தார் ரஜினிகாந்த். இன்னும் சற்று நேரத்தில் மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்து, அவர்கள் மத்தியில் பேச உள்ளார் நடிகர் ரஜினிகாந்த். 




17:47 05-03-2018


காரில் இருந்து இரங்கி மேடை நோக்கி சென்றார் ரஜினி. அவருடன் நடிகர் பிரபு மற்றும் விஜயகுமாரும் இருந்தனர்



 



17:37 05-03-2018
எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சி அரங்கத்திற்கு வந்தார் ரஜினிகாந்த். கிட்டத்தட்ட 3500-க்கு அதிகமானோர் அமர்ந்துள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் எம்.ஜி.ஆர். சிலையை திறக்கிறார் ரஜினிகாந்த்.


 



 



தமிழக திரைத்துறையில் முன்னணி நாயகனாக இருக்கும் ரஜினி மற்றும் கமல் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளன. இருவரும் தங்கள் தனித்து போட்டி இடப்போவதாக தெளிவுப்படுத்தி உள்ளனர். 


இந்நிலையில், அரசியல் அறிவிப்புக்கு பின் முதன்முறையாக ரஜினிகாந்த் பொது நிகழ்ச்சியில் இன்று கலந்து கொள்கிறார். மதுரவாயலில் உள்ள எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அந்நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரின் வெண்கல சிலையை திறந்து வைக்கிறார்.


பின்னர், மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்து, அவர்கள் மத்தியில் பேச உள்ளார் நடிகர் ரஜினிகாந்த். 


இந்த நிகழ்ச்சிக்கு பல்கலைக் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் அதிமுக எம்.பி-யுமான ஏ.சி சண்முகம் தலைமை தாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ரஜினி வருகையொட்டி, மதுரவாயல் சாலையில் முழுவதும் ரஜினிக்கு பிரம்மாண்ட பேனர்கள் வைத்துள்ளனர். ஆனால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பேனர்கள் வைக்கப்பட்டது பாராட்டக்குரியது.