தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற்றுள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்றும் நாளையும் பலத்த காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலார்ட் விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் கனமழை மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஓரிக்கை, பெரியார் நகர், செவிலிமேடு, பூக்கடைச்சத்திரம், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை  மற்றும் வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பொழிந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மிக்ஜாம் புயல்: 7 மாவட்டங்களில் மிக கனமழையோடு 70 கிமீ வேகத்தில் தரைக்காற்று வீசும்..!


கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 211.30 மி.மீட்டர் மழையும்,  சராசரியாக 35.22 மி.மீட்டராகவும் மழை அளவு பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக குன்றத்தூரில் 48.40மி.மீட்டரும், குறைந்தபட்சமாக வாலாஜாபாத்தில் 14மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. காஞ்சிபுரத்தில் 30.80மி.மீட்டரும், உத்திரமேரூரில்-45.10மி.மீட்டரும், வாலாஜாபாத்தில்-14.00மி.மீட்டரும், ஸ்ரீபெரும்புதூரில்-34.60மி.மீட்டரும், குன்றத்தூரில்-48.40மி.மீட்டரும், செம்பரம்பாக்கத்தில்-38.40மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையின் காரணமாக  ஏரிகள் நிரம்ப துவங்கியுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் நீர்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 381 ஏரிகளில் 82ஏரிகள் முழு கொள்ளவை எட்டியுள்ளது. 57ஏரிகள் 75 சதவிகிதமும், 94 ஏரிகள் 50 சதவிகிதமும், 132 ஏரிகளும் 25 சதவிகிதமும், 16 ஏரிகள் 25 சதவிகிதத்திற்கு கீழ் கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


மிக்ஜாம் புயல் எச்சரிக்கை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரத்திற்கு மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மேலும் 100க்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளனர். இவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலர் பயிற்சி பள்ளி மற்றும் காவலர் சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


மேலும் படிக்க | புயலை எதிர்கொள்ள தயார், 5 பேர் இதுவரை உயிரிழப்பு.... மக்களே கவனம் - அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ