வங்க கடலில் நிலைக் கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. டிசம்பர் 3 ஆம் தேதியான ஞாயிற்றுக் கிழமை சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக சென்னையை ஒட்டி இருக்கும் தமிழகத்தின் 7 வட கடலோர மாவட்டங்களில் மிக அதிகமான கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் மிக்ஜாங் புயல் வலுப்பெற்ற பிறகு டிசம்பர் 4 ஆம் தேதி மிக கன மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இதனையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு டிசம்பர் 4 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்!
திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர்,
கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்!
வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,
மிக்ஜாங் புயல் குறித்த லேட்டஸ்ட் தகவல்கள்
- மிக்ஜாங் புயல் சென்னைக்கு 450 கி.மீ தொலைவில் கிழக்கு - தென்கிழக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது
- வங்க கடலில் நிலை கொண்டுள்ள இது, டிசம்பர் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை புயலாக வலுப்பெறும்
- தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வட கடலோர மாவட்டங்கள், ஒரு சில உள் மாவட்டங்களில் மழை பெய்யும்
- டிசம்பர் 4ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
- கடலோர மாவட்டங்களில் 70 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்
- 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்
- சென்னையை பொறுத்தவரையில் நீர்நிலை வழித்தடங்களான மணலி சடையங்குப்பம் பகுதியில் போக்குவரத்து மாற்றம். மாற்றுப் பாதையில் செல்ல வாகன ஓட்டிகளுக்குப் போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தல்
- செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் நீர்நிலை கொள்ளளவு எட்டியுள்ளதால், உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுவதால் நீர்நிலை வழித்தடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது
- இருப்பினும் புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாக சென்னை மேயர் பிரியா ராஜன் தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ