சென்னையில் கொசு இல்லா இல்லம் என்ற திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய்பாஸ்கர் தொடங்கி வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிகழ்வு சென்னை ராயப்பேட்டையில் மருத்துவ முகம் இன்று தொடங்கிவைத்து நிலவேம்பு குடிநீரை மக்களுக்கு வழங்கியுள்ளார். 


சென்னையில் டெங்குவின் தாக்கம் அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சலால் நிகழும் மரணங்கள், சென்னை மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன. அரசு மருத்துவமனைகளில், டெங்கு அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.


அரசு தரப்பில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருவதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரச் செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறிவருகின்றனர். 


இந்நிலையில், 'கொசு இல்லா இல்லம்'  என்கிற புதிய திட்டத்தை, சென்னையில் இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன்  ஆகியோர் தொடங்கிவைத்தனர். 


இத்திட்டத்தில், மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை இணைந்து,சென்னையில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ள உள்ளனர். 


இந்த நிகழ்ச்சியின்போது பேசிய சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், ’காய்ச்சல் வந்தால் மருத்துவரிடம்தான் செல்ல வேண்டும். 


சுய மருத்துவம் செய்துகொள்ளக்கூடாது. மருந்தகங்கள், மருந்து சீட்டு இல்லாமல்  மருந்து மாத்திரைகளைக் கொடுக்கக் கூடாது’ என்றார்.


அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், “சென்னையில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதிகளுக்கு சுகாதாரத்துறையினரை தீவிரமாகச் செயல்பட அறிவுறுத்தியுள்ளோம். 


காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள பிற மாவட்டங்களுக்கும் மருத்துவர்களை அனுப்பியுள்ளோம்” என்றார்.