வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சிறுவன் ஒருவனை தனது காலணியை கழற்ற வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக அரசு சார்பில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள கோவில் மற்றும் மடங்களை சேர்ந்த யானைகளுக்கு ஆண்டு தோறும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையோரத்தில் சிறப்பு நலவாழ்வு முகாம் நடந்து வருகிறது.


இவ்விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நீலகிரி மாவட்ட ஆட்சியர்  இன்னவென்ட் திவ்யா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நடந்து சென்ற போது அவரது செருப்பு புல்வெளியில் சிக்கிக் கொண்டது. இதனை பார்த்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அங்கிருந்த ஆதிவாசி சிறுவனை அழைத்து தனது செருப்பை கழற்றுமாறு கூறினார். அந்த சிறுவனும் அமைச்சர் அணிந்திருந்த செருப்பை கழற்றினார்.


"டேய் வாடா.. வாடா.. செருப்பை கழற்றுடா" என்று அங்கு நின்று கொண்டிருந்த சிறுவனை அழைக்க, அந்த சிறுவனும் அமைச்சரின் காலணியை கழற்றி மாட்டிவிட்டார். இந்த சம்பவத்தால் அங்கிருந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.