மணிப்பூர் விவகாரம்: பேச்சோடு நிறுத்திக்காதீங்க பிரதமரே நடவடிக்கை எடுங்க - துரைமுருகன்
மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி இப்போதாவது வாய் திறந்திருக்கும் நிலையில், விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நேற்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்த தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், " தமிழ்நாட்டிற்கு மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீரை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அந்த அளவிற்கு நீர் திறக்கப்படவில்லை. ஜூன் மாதத்தை பொருத்தவரை 26 டிஎம்சி நீர் வழங்க வேண்டும். ஆனால் மூன்று டிஎன்சி நீரை மட்டுமே கர்நாடகா திறந்து விடப்பட்டது. அதனுடைய விளைவு எவ்வளவுதான் தண்ணி குறைத்து மேனேஜ் செய்தாலும் 20 நாள் மட்டுமே பயிர்களுக்கு தண்ணீர் வழங்க முடியும்.
எனவே இதை முன்கூட்டியே உணர்ந்துதான் கடந்த ஐந்தாம் தேதியே டெல்லி சென்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து காவிரி மேலாண்மை ஆணைக்கு உத்தரவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். தண்ணீரை சரியாக காவிரியில் விடவில்லை என்றால் அல்லது இரண்டு மாநிலங்களிலும் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதனால் கூட அதனை எப்படி பங்கிட்டு கொள்வது என காவேரி மேலாண்மை ஆணையம் முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது. இந்த அதிகாரத்தை சரியாக பயன்படுத்த உத்தரவிடுங்கள் என கூறுவதற்கு தான் கடந்த ஐந்தாம் தேதி டெல்லி சென்று ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்தோம்.
இதற்காகத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதி கொடுத்தார். அதனை எடுத்துக் கொண்டு நேற்று ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து கடிதத்தையும் கொடுத்து சூழ்நிலை விளக்கினோம். அவரும் புரிந்துகொண்டு ஒரு நாட்களில் காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரிகளை கூப்பிட்டு, இருக்கக்கூடிய நீரை எப்படி பங்கிட்டு வழங்க வேண்டுமோ அதனை விரைவில் வழங்குங்கள் என நான் உத்தரவிடுகிறேன் என தெரிவித்தார். எனவே அந்த நம்பிக்கையோடு வந்திருக்கிறேன். அந்த நம்பிக்கையை செயல்படுத்தினால் தஞ்சை போன்ற பகுதிகளில் பயிர்களை காப்பாற்றப்படும்" என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மணிப்பூர் கலவரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், பிரதமர் மோடி வாய் திறந்ததோடு இல்லாமல் விரைவில் நடவடிக்கை எடுத்து அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் தற்போது தான் வாய் திறந்து இருக்கிறார். மணிப்பூர் கலவரம் கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது. மணிப்பூர் பெரிய மாநிலம் அல்ல. சின்ன மாநிலம் தான். அதனை முன்கூட்டியே அறிந்து சரி செய்து இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
மேலும் படிக்க | கிளிசரின் போட்டு கண்ணீர் வடித்தவர் எங்கே? குஷ்பூவுக்கு அமைச்சர் கீதா ஜீவன் கேள்வி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ