கமல்ஹாசன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பையோ வடகொரிய அதிபர் கிம் ஜாங்கையோ சந்தித்தால் கூட எங்களுக்குக் கவலையில்லை என அமைச்சர் ஜெயக்குமார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியைச் சந்தித்துப் பேசினார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ஐக்கிய ஜனநாயயக் கூட்டணியின் தலைவருமான சோனியாவை இன்று சந்தித்துப் பேசினார். சந்திப்பில் கூட்டணி குறித்துப் பேசவில்லை, தமிழக அரசியல் நிலவரம் குறித்து மட்டுமே பேசினோம் என இருதரப்பும் விளக்கம் அளித்தது. 


இந்நிலையில், ராகுல் காந்தி, சோனியா காந்தியைக் கமல்ஹாசன் சந்தித்தது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு பதிலளித்த அவர்,  ``அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பையோ அல்லது வடகொரிய அதிபர் கிம் ஜாங்கையோ சந்தித்தால் கூட எங்களுக்குக் கவலையில்லை. அவர் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம். அது அவருடைய உரிமை. அதை நாங்கள் பொருட்படுத்தப்போவதில்லை" என்று கூறினார். 


மேலும், மக்கள்தொகை அதிகரிப்பு காரணமாக போக்குவரத்தை சீர்படுத்தவே பசுமைவலி திட்டம் துவங்கபடுகிறது என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது!