பிளாஸ்டிக் பயன்பாட்டை மக்கள் குறைக்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்!
தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை மக்கள் குறைக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கருத்து கூறியுள்ளார்!
தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை மக்கள் குறைக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கருத்து கூறியுள்ளார்!
இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது,,! பிளாஸ்டிக் பயன்பாட்டால் கடல் பகுதி மாசுபடுவதுடன், மீன் இனப்பெருக்கமும் பாதிக்கப்படுகிறது.
எனவே,பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க சட்டத்தின் மூலம் தடை விதித்தாலும் மக்கள் போதிய ஒத்துழைப்பு தரவேண்டும். பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உறுதி செய்வதே அரசின் நோக்கம். பிளாஸ்டிக் பொருட்கள் வாழ்க்கை வசதிகள் தேவை என்றாலும், இயற்கையைக் காப்பதும் மிக அவசியம். ஆகையால், மறு சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக்கை மட்டுமே மக்கள் பயன்படுத்த வேண்டும்.
பல்வேறு நாடுகளை போல பிளாஸ்டிக் இல்லாத சூழலை ஏற்படுத்த தமிழக அரசும் நடவடிக்கை எடுத்துள்ளது இவ்வாறு அவர் கூறினார்.