கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துச்சாமி தலைமையில் நடைபெற்றது. இதில், ஓய்வூதிய திட்டம், விபத்து நிவாரணம், இலவச பட்டா, தையல் எந்திரம் ஆகிய நலத்திட்டங்கள் ரூ2,55,14,430 மதிப்பீட்டில், 256 பயனாளிகளுக்கு அமைச்சர் முத்துச்சாமி வழங்கினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, " மாவட்டத்தில் என்னென்ன பணிகள் நடைபெற்று வருகிறதோ அதனை வேகப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம். புதிதாக என்னென்ன திட்டங்கள் இங்கு சொல்லி உள்ளார்கள் அந்த துறை சார்பாக எழுத்துப்பூர்வமாக அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவை மாவட்டத்தினுடைய முன்னேற்றம் அடுத்த அடி எடுத்து உரைக்க வேண்டும். அதிகாரிகள் மிகுந்த அக்கறையுடன் கருத்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள். முதல்வர் அவர்கள் நேரடியாக இது பற்றி கடிதம் கொடுத்து அவர்கள் அனுப்புகின்ற அந்த கோரிக்கைகளை முதல்வரிடம் கொடுத்து சரி செய்வதற்கான நடவடிக்கை எடுப்போம். முதல்வர் அவர்கள் பல இடங்களில் ஆய்வுக்காக சென்றுள்ளார். அதேபோல கோவை மாவட்டத்திற்கும் வந்து  ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அதற்கான தேதி அவர்கள் அறிவிப்பார்கள். ஆய்வுக்கு வருகிறபோது எந்தெந்த பணிகள் முடிக்க வேண்டும்,  புதிய பணிகள் என்னென்ன தேவை என்பதையும் அவரிடத்தில் நாம் கேட்கலாம் என்பதற்காக இந்த ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.


மேலும் படிக்க | Tomato price: தக்காளி விலை எப்போது குறையும்? வெளியான அதிர்ச்சி தகவல்!


வால்பாறையில், மழை அதிகமாக பெய்தது. முதல்வர் அங்கு சென்று பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள சொன்னார். முதல்வரின் அறிவுறுதல்படி வால்பாறை சென்றோம். மிக அருமையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம்  எடுத்துள்ளார்கள். தண்ணீர் அதிகம் வந்தாலும் கூட, ஆபத்து இல்லாத  சூழ்நிலை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதை நேரடியாக பார்க்க முடிந்தது. முதல்வருக்கு அது பற்றி தெரிவிக்கப்பட்டது. கோவைக்கு சிறப்பு நிதியாக ரூ200 கோடி   முதல்வர் வழங்கி உள்ளார். 


அதில்  40%  பணிகள் நடைபெற்று வருகிறது. வீட்டு வசதி வாரியத்தில் பத்திரம் கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கையையும் எடுக்கப்பட்டுள்ளது" என்றார். செல்வபுரம் பகுதியில் வீடு மோசடி என்ற கேள்விக்கு அது விசாரணையில் இருக்கிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கவுண்டம்பாளையம் அடுக்குமாடி குடியிருப்பில் அரசு அலுவலர்கள் இல்லாமல் வேறு நபர் வாடகைக்கு உள்ளார்கள் என்ற கேள்விக்கு, கண்டிப்பாக ஆய்வு செய்து தவறு இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அரசு அலுவலகம் ஒதுக்கீடு செய்துள்ளது. அதில் அவர்கள் இருக்க வேண்டும். வேறு யாருக்கும் வாடகை விடக்கூடாது அதனை செய்தால் அது ரத்து செய்யப்படும் என எச்சரித்தார்.


டாஸ்மாக் கடைகளில் அதிக பணம் வாங்குவது தொடர்பான கேள்விக்கு, சில இடங்களில் டாஸ்மாக் கடைகளில் தவறு இருக்கலாம், அதனை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். 500 கடைகள் மூடுகிற போது கூட பக்கத்தில் வேறு கடை இருக்கிறதா? என்பதை பார்த்து தான் மூடினார்கள். டாஸ்மாக் பார்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. வழக்கு முடிந்ததும், நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்றார்.


மேலும் படிக்க | ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது... சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ