5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், மாணவர் சேர்க்கைக்கான ஆணையினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் அறையில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில், முதல் 12 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கான சேர்க்கை ஆணையை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் மொத்தம் 1,731 இடங்கள் உள்ள நிலையில் முதல் சுற்று கலந்தாய்வின் முடிவில் சுமார் 1,300 இடங்கள் நிரம்பியுள்ளன. மீதம் இருக்கும் இடங்கள் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் நிரப்பப்படும்.


மேலும் படிக்க | ஆன்லைன் ரம்மியில் பணம் இழப்பு - மோசடியாளரான நகைக்கடை மேலாளர்


தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் ரம்மிக்கான அவசர சட்டம் விரைவில்  கொண்டு வரப்படும்  என்றும், அச்சட்டம் எந்த நீதிமன்றத்திலும் ரத்து செய்யப்படாத வகையில் வலுவானதாக கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.


மேலும், நீட் தேர்வு சட்ட மசோதா குறித்து ஆளுநர் கேட்கப்பட்ட விளக்கங்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சட்டத்துறையால் வழங்கப்பட்டுள்தாக கூறிய அவர், நீட் மசோதாவிற்கு நல்ல முடிவு வரும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். துணைவேந்தர்களை மாநில அரசே  நியமிக்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் மாளிகையிலிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கப் பெறவில்லை எனவும் அவர் கூறினார்.


மேலும் படிக்க | ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க என்ன தயக்கம்?... சீமான் கேள்வி


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ