மயிலாப்பூர் கோவில் விவகாரம்: தீவிரவாத செயல் இல்லை - அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
மயிலாப்பூர் கோவில் முன்பு மர்ம நபர் தீ வைத்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் சேகர்பாபு, அது தீவிரவாத செயலாக பார்க்கவில்லை என விளக்கம் அளித்தார்.
சென்னை, மதுரவாயல் மரகதவல்லி சமேத மார்க்க சகாய ஈஸ்வரர் கோயிலில் ரூ.73.76 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூ.39.58 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கோயில் அலுவலகம், மடப்பள்ளி, தரைத்தளம் ஆகியவற்றை பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், புதிதாக கட்டப்பட்ட கோயில் அலுவலகம், மடப்பள்ளி மற்றும் தரைத்தளத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்த கோயிலில் 12 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்ட திருப்பணி கடந்த ஆண்டு முடிவடைந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் 6180 ஏக்கர் கோயில் நிலம் மீட்கப்பட்டு உள்ளது. கோயில் இடங்கள் அளவீடு செய்து 1,60,190 ஏக்கர் கண்டறியப்பட்டு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி கம்பீர தோற்றத்துடன் நடந்து கொண்டிருக்கிறது. அதே போல் கம்பீரமாக இந்த கோயிலுக்கு உபயதாரர்கள் உதவியுடன் ரூ.1.35 கோடி மதிப்பில் ராஜகோபுரம் அமைக்கப்படும்.
மயிலாப்பூர் கோயில் வெளியே நடந்த சம்பவம் ஏற்று கொள்ள முடியாத சம்பவம் தான். கோயில் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. யார் தவறு செய்தாலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். தீவிரவாத செயலாகவோ, எதேச்சையாக நடந்த செயலாக பார்க்கவில்லை. திருவேற்காடு கோயிலில் நகை திருட்டு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
மேலும் படிக்க | அண்ணாமலை அல்ல, அவரது அப்பனே வந்தாலும் முடியாது -அதிமுக ஆர்.பி.உதயகுமார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ