இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை புரசைவாக்கம் கங்காதேசுவரர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டது போது,  அக்கோயிலில் 3 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ரூ.15 லட்சம் செலவில் திருத்தேர் மேம்படுத்தப்படுவதோடு,  சிறந்த வகையில் மரத்தேர் செய்வதற்கு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது எனக் கூறினார். இதற்கான பணிகள் விரைவில் பணிகள் தொடங்கும் எனவும் அவர் உறுதி அளித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும், குளத்தை சீரமைக்க 24 கோடி குளத்திற்கு செலவிடப்பட்டதாக  வெளியான செய்தி தவறானது என்று கூறிய அமைச்சர் சேகர் பாபு,  குளத்தை சீரமைக்க நிதி  ஏதும் ஒதுக்கவில்லை என  தெளிவு படுத்தினார்.  எனினும் கோயிலின் குளம் சென்னை மாநகராட்சி 2.0 திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் என்று உறுதி அளித்த அமைச்சர், கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டு, நிலுவையில் உள்ள வாடகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.


ALSO READ | Navratri 2021: இந்த ஆண்டு நவராத்திரி ஏன் முக்கியமானது? தெரிந்துக் கொள்வோம்...


இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 5 கல்லூரிகள் இயங்கி வரும் நிலையில், புதிதாக 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டபேரவையில் அறிவித்துள்ளதாக கூறிய அவர்,  இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தொடங்கப்படும் கல்லூரிகளில் ஆன்மீக சார்ந்த பாடமும் நடத்தப்படும் என்றார்.  தனியார் கல்லூரியுடன் போட்டிபோடும் விதத்தில் இந்த கல்லூரிகள்  செயல்படும் எனவும் கூறினார்


தமிழகத்தில் உள்ள சில கோவில்கள் பெயர்கள் சமஸ்கிருத பெயரில் உள்ளது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்விக்கு, பதிலளித்த அவர், இது போன்ற வேண்டுகோள்கள் பல இடங்களில் இருந்து வருவதால், இது குறித்து அலோசனை செய்து, முதல்வர் அனுமதியுடன் இரண்டு பெயர்களிலும் கோவில்கள் பெயர்கள் அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.


மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தான் கோயில்கள் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் மூடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று  முழுமையாக குறைந்த பிறகு, வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் கோவில் திறப்பதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். போராட வலுவான காரணம் இல்லாததால் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் என அமைச்சர் சேகர் பாபு குற்றஞ்சாட்டினார்.


புரோக்கர்கள் மூலம் பணம் வசூலிக்கும் முறையை ஒழித்து முறைப்படுத்தப்படும் எனக் கூறிய அமைச்சர் சேகர் பாபு, கோயில்களுக்கு பக்தர்கள் நன்கொடை அளிக்க இணையதளம் தொடங்கப்படும் என்றர். திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோயிலில் செவ்வாய் கிழமை 
பக்தர்கள் அதிகளவில் வரும் நிலையில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் கலந்து ஆலோசனை செய்து செவ்வாய் கிழமை கோவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு கூறினார்.


ALSO READ | குபேரனுக்கு வட்டி கட்டும் பணக்கார கடவுள் திருப்பதி பெருமாள்  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G