ஜேக்டோ ஜியோ போராட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டாம் என அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு ஈரோட்டில் இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமில் மாவட்டத்திற்கு 10 ஆசிரியர்கள் வீதம் 320 பேர் பங்கேற்றுள்ளனர்.


ஈரோட்டில் திண்டல் தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் முகாமினை அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் ஆசிரியர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நீட் விலக்கு பெற வேண்டும் என்பது தான் தமிழக அரசின் இலக்கு, அது வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு  இலவச நீட் பயிற்சி தொடர்ந்து வழங்கப்படும் என்றார். 


பின்லாந்து நாட்டில் மாணவர்கள் படிக்கும் போதே பிராக்டிகல் பயிற்சி வழங்கப்படுகிறது. தமிழகத்திலும் அது போன்ற பாட திட்டத்தை கொண்டு வந்து 9-ஆம் வகுப்பு முதல் தொழிற்பயிற்சி அளிப்பது குறித்து ஆராயப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.