சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை சார்பாக 37 முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

> அரியவகை நூல்கள் மற்றும் ஆவணங்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும்.


> மதுரையில் 1 லட்சம் நூல்களுடன் மாபெரும் நூலகம் அமைக்கப்படும். 


> கீழடியில் சிந்துசமவெளி நாகரிகம் உட்பட பழம்பெரும் நாகரிகம் பற்றி சிறப்பு நூலகம் அமைக்கப்படும்.


> தமிழகம் முழுவதும் மலைப்பகுதி மற்றும் கிராமப்புறங்களில் 30 தொடக்கப் பள்ளிகள் துவக்கப்படும்.


> 32 மாவட்டங்களிலும் நூலகம்  அமைக்கப்படும்.


> ரூ.30 கோடி செலவில் பொது நூலகங்களுக்கு புதிய நூல்கள் வாங்கப்படும்.


> மெட்ரிக் பள்ளிகள் தொடங்க இணயைதளம் மூலம் விண்ணப்ப அனுமதி.


> 5,639 அரசு பள்ளிகளுக்கு ரூ.22.56 கோடி செலவில் நாப்கின் வழங்கும் இயந்திரம் அளிக்கப்படும்.


> மாணவர்களின் பொது அறிவை வளர்க்க 31,322 பள்ளிகளில் நாளிதழ் மற்றும் சிறுவர் இதழ் வழங்கப்படும்.


> 486 அரசு நடுநிலைப்பள்ளிகளில் ரூ.6.17 கோடி செலவில் கணினி வழி கற்றல் மையங்கள் அமைக்கப்படும்.


> கல்வி வளர்ச்சியில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு மாவட்ட வவாரியாக சிறந்த 4 பள்ளிகளுக்கு 'புதுமை பள்ளி' விருது.


> 4,084  ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.


> 17,000 தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும்.


> சுயநிதி பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி வழங்கப்படும்.


உள்ளிட்ட 37 புதிய அறிவிப்புகளை சட்டப் பேரவையில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.