மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு அப்பல்லோ வந்து சென்றார்!
அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு முதல் அமைச்சரின் உடல்நலம் பற்றியும் மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி கேட்டறிந்து திரும்பி சென்றுள்ளார்.
மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் முதலமைச்சர் இருப்பதாகவும் அப்பலோ மருத்துவ அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றன என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா காலமானதாக அதிகார பூர்வமாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையில் கூடி இருந்த தொண்டர்கள் கதறி அழுதனர்
முதல்வர் ஜெயலலிதா மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார் என ரிச்சர்ட் பீலே தகவல் தெரிவித்துள்ளார்.
லண்டன் ரிச்சர்ட் பீலே முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை மிக மிக மோசமாக உள்ளது. அதிக பட்சமாக என்ன செய்யமுடியோ அதை செய்தாகி விட்டது. சரவ்தேச தரத்தில் சிகிச்சை அளித்தும் முன்னேற்றம் இல்லை என கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா கவலைக்கிடமான நிலையில் உள்ளார். தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம் என அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக, மருத்துவமனையின் துணை இயக்குனர் சங்கீதா ரெட்டி தனது டுவிட்டர்' பக்கத்தில் கூறியதாவது:- தீவிர சிகிச்சைக்கு பிறகும் ஜெயலலிதா மிகவும் கவலைக்கிடமாக உள்ளார்' என தகவல் தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்எல்ஏ -களின் அவசர கூட்டம் அப்பல்லோ மருத்துவமனையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அனைத்து எம்எல்ஏ -க்களும் கலந்து கொண்டனர். சுமார் ஒன்றரை மணிநேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது.
ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒற்றுமையாக செயல்பட அதிமுக எம்எல்ஏ -க்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கபட்டதாகவும், மேலும் அனைத்து எம்எல்ஏ -க்களிடமும் கையெழுத்து பெறப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால முதல்-அமைச்சராக ஒருவர் இன்று தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீவிர மருத்துவ கண்காணிப்பில் முதல்வர் ஜெயலலிதா.
முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அப்பல்லோ ஆஸ்பத்திரி தரப்பில் தகவல் வந்த வண்ணம் இருந்தது. அப்பல்லோ ஆஸ்பத்திரி சேர்மன் பிரதாப் சி.ரெட்டி மூன்று முறை ஜெயலலிதா குணம் அடைந்து வருவதாக கூறினார். கடந்த 73 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை திடீரென தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ரத்த ஓட்டத்தை சரிசெய்வற்காக ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதய செயல்பாட்டிற்காக செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. நுரையீரல் மற்றும் இதயம் சீராக செயல்பட மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
ஜெயலலிதா உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என அப்பல்லோ மருத்துவமனை தனது புதிய அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தெரிந்து கொள்வதற்காக அப்பல்லோ மருத்துவமனை முன்பு அதிமுக தொண்டர்கள் நேற்று மாலை முதல் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் ஜெயலலிதா நலம் பெற்று திரும்பி வரவேண்டும் என்ற நாடு முழுவதும் மக்கள் பிரார்த்தனைகள் செய்து வருகின்றன.