கஜா புயல் மீட்பு பணியில் தமிழக அரசு புதுக்கோட்டை மாவட்டத்தை புறக்கணிப்பதாக மக்கள் தெரிவித்து வரும் நிலையில் இன்று அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் .எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் பலத்த சேதத்தினை ஏற்படுத்தியுள்ளது, எனினும் புதுக்கோட்டை மாவட்டத்தின் சேதத்தினை குறித்து தமிழக அரசு கண்டுக்கொள்ளாமல் உள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தமட்டில், பல்லாயிரக்கணக்கான வீடுகள், மா, தென்னை, தேக்கு உள்ளிட்ட மரங்கள் லட்சக்கணக்கில் சேதமாகியுள்ளன. 


மின்சாரம் இன்றி மக்கள் தவித்து வருவதாகவும், குடிநீருக்காக ஒரு கேன் நீரினை ரூ.200 கொடுத்து மக்கள் பயன்படுத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கஜா புயல் மீட்பு பணியில் தமிழக அரசு போர்கால அடிப்படையில் செயல்பட்டு வருவதாக தமிழக முதல்வர் தெரிவித்து வருகின்றார், ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட ஏதும் இன்றி தவித்து வருகின்றனர். 


இதன்காரணமாக தங்களுக்கு நிவராணப் பொருட்கள் வந்துசேர வேண்டும் என பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று புதுக்கோட்டையில் புயல் பாதிப்பு பணிகளை பார்வையிட அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் மற்றும் .எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர சென்றுள்ளனர். 



இதுகுறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரியப்படுத்தியாள்ளர். தற்போது அவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.