சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா என 10 மாநகராட்சிகளில் பிச்சைக்காரர்களுக்கு உணவு

நாடு முழுவதும் லாக்-டவுன் உத்தரவு இருக்கும் வரை 10 மாநகராட்சிகளில் 1 லட்சம் பிச்சைக்காரர்களுக்கு உணவு மையங்களை தொடங்குமாறு மத்திய சமூக நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புது டெல்லி: சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, இந்தூர், பாட்னா, நாக்பூர் மற்றும் லக்னோ என தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்தம் பத்து மாநகராட்சிகளில் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை, 1 லட்சம் பிச்சைக்காரர்களுக்கு உணவு மையங்களை உடனடியாக தொடங்குமாறு சமூக நீதி அமைச்சகம் அந்தந்த நகரங்களின் மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கான செலவு அமைச்சகம் ஏற்றுக்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுக்குறித்து மத்திய சமூக நீதி அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் நகலை கீழே இணைக்கப்பட்டு உள்ளது.
இன்று நாட்டில் 88 புதிய #COVID வழக்குகள் பதிவாகியுள்ளன. தற்போது வரை ஒரே நாளில் அதிக நோயாளிகள் பாதிக்கப்பட்டது இன்று தான். சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தரவுகளின்படி மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 694 ஆக உயர்ந்துள்ளது.