மதுரையில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை அமைக்க முக அழகிரி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் இருந்து விமானம் இன்று மதுரை வந்தடைந்து முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது...
 
"திமுக தலைவர் கருணாநிதியின் சிலையை மதுரையில் அமைக்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள ஆவின் பால் பண்ணை சாலை சந்திப்பில் அவரது சிலை வைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுத்துள்ளோம். சிலை விவரம் குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும்.


அமைதி பேரணி தற்போது தான் நடைபெற்று முடிவடைந்துள்ளது. எனதுஅடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பேன்" என தெரிவித்தார். 


முன்னாதக கடந்த செப்., 5-ஆம் நாள் தனது தொண்டர்களின் ஆதரவினை திமுக-விற்கு வெளிப்படுத்தும் விதமாக மறைந்த தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் சமாதியினை நோக்கி அமைதி ஊர்வலம் நடத்தினார். தனது பலத்தினை தெரியப்படுத்திய பின்னர் தனது அரசியல் முடிவினை குறித்து அறிவிப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தனது அடுத்தக்கட்ட முடிவினை குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்!