மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் அவர்களின் சமாதியில், முக அழகிரி அவர்கள் குடும்பத்துடன் அஞ்சலி செலுத்தினார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவிக்கையில்...


"என் அப்பாவிடன் என் ஆதங்கத்தை தெரிவித்திருக்கின்றேன். அது தற்போது மக்களுக்கு தெரியாது, காலம் வரும்போது மக்களுக்கு தெரியவரும். எனது ஆதங்கம் கட்சி தொடர்பானதாக தான் இருக்கும்.


தலைவர் கலைஞரின் உன்மையான, விசுவாசமான தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர். அனைவரும் என்னை ஆதரித்துக்கொண்டு இருக்கின்றனர். கட்சி தொடர்பான என் ஆதங்கத்திற்கு காலம் விரைவில் பதில் சொல்லும்.


நான் தற்போது திமுக-வில் இல்லை., எனவே செயற்குழு பற்றி எனக்கு தெரியாது என தெரிவித்துள்ளார்"


2014-ஆம் ஆண்டு திமுக-வில் இருந்து நீக்கப்ட்ட அழகிரி அவர்கள், தற்போது திமுக-வின் தலைமை பொருப்பு ஏற்பாரா? என்று அவரின் தொண்டர்களின் மத்தியில் கேள்விகள் எழுந்து வரும் நிலையில், தான் கட்சியை குறித்த ஆதங்கத்தினை தனது தந்தையிடம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


திமுக தலைவர் மு கருணாநிதி அவர்கள் மறைவினை அடுத்து அக்கட்சியின் முக்கிய முடிவுகள் எடுப்பது தொடர்பாக நாளை காலை 10 மணியளவில் திமுக செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள  கலைஞர் அரங்கில் நடைப்பெறும் என தெரிவிக்கப்ட்டுள்ள நிலையில், தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ள அழகிரி அவர்கள் தற்போது இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.