ஆளுநர் தேநீர் விருந்து: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பார்... காரணத்தை விளக்கிய தங்கம் தென்னரசு!
Tamil Nadu News: சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகையில் இன்று மாலை வழங்கும் தேநீர் விருந்தில் அரசு சார்பில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Latest News Updates: 78ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை தலைமை செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கொடியேற்றிவைத்தார். மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் தகைசால் தமிழர் விருது உள்பட பல்வேறு விருதுகளையும் முதலமைச்சர் விருதாளர்களுக்கு வழங்கினார்.
இந்தாண்டு தகைசால் தமிழர் விருது முன்னாள் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த காங்கிரஸ் தலைவவருமான குமரி அனந்தனுக்கு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு 10 லட்ச ரூபாயும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.
முதலமைச்சர் மருந்தகம்
இதன்பின் தலைமை செயலகத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"சுதந்திர தின உரையில் முதலமைச்சர் ஸ்டாலின் மிக சிறப்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். முதல்வர் மருந்தகம் என்ற அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
மேலும் படிக்க | தமிழக ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தில் அதிமுக பங்கேற்கும்
குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் முதலமைச்சர் மருந்தகம் திறக்கப்பட உள்ளது. இது ஏழை, எளிய மக்களுக்கு நன்மை அளிக்கும் திட்டமாகும். பல்வேறு நபர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் மிகச் சிறந்த அறிவிப்பாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது" என்றார்.
ஆளுநர் தேநீர் விருந்து: முதல்வர் பங்கேற்பார்
தொடர்ந்து பேசிய அவர்,"ஆளுநரின் தேநீர் விருந்தில் அரசு சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்கிறோம். அரசியல் கருத்துக்கள் என்பது வேறு அரசின் நிலைப்பாடு என்பது வேறு. ஆளுநரின் கருத்தியல் சார்பான விஷயங்களில் மாறுபட்ட கருத்துகள் திமுகவிற்கு உள்ளது. அரசின் சார்பில் அரசின் நிலைப்பாடு என்னவென்றால் அவருடைய பதவிக்கு, அவருடைய பொறுப்பிற்கு ஆளுநர் கொடுத்திருக்கும் அழைப்பை ஏற்று தேநீர் விருந்தில் அமைச்சர்கள் பங்கேற்கிறோம்" என்றார்.
திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு
முன்னதாக, திமுகவும், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம், கொமதேக, மமக உள்ளிட்டவை ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தன. எனினும் அரசு தரப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பாரா மாட்டாரா என சந்தேகம் எழுந்த நிலையில், தற்போது அமைச்சர் தங்கம் தென்னரசு, முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநரின் தேநீர் விருது அரசு சார்பில் பங்கேற்பார் என்பது உறுதிப்படுத்தி உள்ளார்.
ஆளுநர் ஆர்.என். ரவி மாநில அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் காரணத்தால் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தெரிவித்திருந்தன. சுதந்திர தினத்தை முன்னிட்டு மாலையில் ஆளுநர் மாளிகையில், தேநீர் விருது நடப்பது வாடிக்கையாகும். அதன்படி, இந்தாண்டும் முக்கிய கட்சிகளுக்கும், முக்கிய அமைப்புகளுக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க ஆளுநர் ரவி அழைப்பு விடுத்திருந்தார். திமுக உள்ளிட்ட கட்சிகள் இதனை புறக்கணித்தாலும், முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் இதில் பங்கேற்கும் என தெரிகிறது.
மேலும் படிக்க | தமிழ்நாட்டின் 26 காவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம் - முழு லிஸ்ட் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ