தமிழகத்தில் மருத்துவத்துறையில் திமுக அரசு செயல்படுத்தி வரும் சிறப்பான திட்டங்கள்!
தொடக்க பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு தொடங்கி, மகளிருக்கு இலவச பேருந்து வசதி, அரசு பள்ளிகளில் படித்த கல்லூரி மாணவிகளுக்கு உதவித்தொகை என பல சிறப்பான திட்டங்களை திமுக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழக மக்களின் நலனுக்கென திமுக அரசு பல்வேறு துறையில் மேம்பாடு செய்தும், பல புதிய திட்டங்களை செயல்படுத்தியும் வருகின்றது. தொடக்க பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு தொடங்கி, மகளிருக்கு இலவச பேருந்து வசதி, அரசு பள்ளிகளில் படித்த கல்லூரி மாணவிகளுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல சிறப்பான திட்டங்களை திமுக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக திமுக அரசு மருத்துவத்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை செய்து மக்களின் கவலையை போக்கியுள்ளது.
'மக்களை தேடி மருத்துவம்' எனும் திட்டத்தை கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலமாக சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வீட்டிற்கே சென்று பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகளை வழங்கி வருகின்றனர்.
சிறுநீரகம் பாதித்தவர்களுக்கு டயாலிசிஸ் செய்துகொள்ள பைகள் வழங்குவது போன்ற சேவையும் இதன் மூலம் செய்யப்படுகிறது. இந்த திட்டத்திற்கு பல விமர்சனங்கள் எழுந்தபோதிலும் திமுக அரசு இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது மற்றும் இதன் மூலம் லட்சக்கணக்கான நோயாளிகள் பலனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் மட்டுமல்லாது திமுக அரசு இன்னும் சில சிறப்பான திட்டங்களை மக்களின் வசதிக்காக செயல்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | காலநிலை மாற்றம் : இந்தியாவுக்கே வழிகாட்டும் தமிழ்நாடு - முன்னெடுப்புகள் என்னென்ன?
’நம்மை காக்கும் 48’ எனும் திட்டத்தின் மூலமாக திமுக அரசு சாலை விபத்தில் சிக்கிக் கொண்டவர்களுக்கு 48 மணி நேரத்தில் சிறப்பான சிகிச்சை அளித்து அவர்களின் உயிரை காப்பற்றுகிறது. தமிழகத்திலுள்ள கிட்டத்தட்ட 609 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அரசு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதியன்று தொடங்கி வைத்தார். மேலும் இதற்காக திமுக அரசு முதற்கட்டமாக ரூ.50 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தது. இதுதவிர கொரோனா பெருந்தொற்று காலத்தில் திமுக அரசு சிறப்பாக செயல்பட்டு பெரிதாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாத வண்ணம் செயல்பட்டது. கொரோனா பெருந்தொற்று சமயத்தில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும்.
ஏழை, எளிய மக்களை தேடி வீட்டிற்கே மருத்துவ வசதி வழங்கிய சிறப்பை இந்த திமுக அரசின் முக்கிய அடையாளமாக கூறலாம். அந்த அளவிற்கு இந்த மருத்துவ திட்டங்களின் மூலம் மக்கள் பயனடைந்துள்ளனர். கொரோனா காலத்தின் திமுக அரசின் பங்கு இன்றியமையாதது என்றே சொல்லலாம், நோயை கட்டுக்குள் வைத்து மக்களை காத்திட அரசு பல துரித நடவடிக்கைகளை எடுத்தது. பெருந்தொற்று காலத்தில் வீடு தேடி சென்று மக்களுக்கு தடுப்பூசி போட்டும், மாத்திரைகளை வழங்கியும் அரசு சிறப்பாக செயல்பட்டது. மக்களுக்காக பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் அரசு செய்தது, கொரோனா காலத்தில் படிப்பை இழந்த பல குழந்தைகளுக்கு கல்வியை தொடர திமுக அரசு வழிநின்றது. தற்போது உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் பல நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது, இதன் தாக்கம் தமிழகத்திலும் வந்துவிடக்கூடாது என்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை விமான நிலையத்திலேயே பரிசோதிக்கவும், அவர்களுக்கு தொற்று உறுதியானால் சிறப்பான முறையில் தனிமைப்படுத்தி வைக்கவும் அரசு உத்தரவிட்டு இருக்கிறது.
மேலும் படிக்க | ஹெல்மெட் அணியாமல் போனால் அவ்வளவுதான் - காவல் துறையினருக்கு டிஜிபி எச்சரிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ