மு.க ஸ்டாலின்: ``பேருந்து கட்டணத்தை`` திரும்ப பெற வலியுறுத்தல்!!
ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பேருந்து கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பேருந்து கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு கடந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று திடீரென்று பேருந்து கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த கட்டண உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவதுல்: தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் 2001ம் ஆண்டு முதல் இரண்டு முறையே மாற்றியமைக்கப்பட்டது. கடைசியாக, 2011ல் உயர்த்தப்பட்டத. கடந்த ஆறு ஆண்டுகளாக பேருந்து கட்டணம் மாற்றியமைக்கப்படவில்லை. பணியாளர்களக்கு வருடாந்திர ஊதிய உயர்வு, ஓய்வூதியங்கள், எரிபொருள் விலை உயர்வு போன்ற காரணங்களை முன்னிட்டு பஸ் கட்டணம் மாற்றி அமைக்க வேண்டிய தவிர்க்க மடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியார்களிடம் கூறும்போது;- ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிதிச்சுமை அதிகரித்துள்ளது. நிதிச்சுமை காரணமாகவே பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
இதனால் போக்குவரத்து ஊழியர்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கட்டண உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சரியான சில்லரை மட்டும் எடுத்துக்கொண்டு பஸ் நிலையங்களுக்குச் சென்ற கூலித் தொழிலாளர்கள், டிக்கெட் விலை உயர்வைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து தற்போது தி.மு.க. செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கூறியதாவது:- ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக பேருந்து கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்றார்.