Tamil Nadu Latest News Updates: கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, மேலும் 12 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துவதாக இன்று அறிவித்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினும் இந்த விவகாரத்தில் முக்கிய ஆணை ஒன்றை பிறபித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாடு அரசு வெளியிட்ட இந்த அறிக்கையில்,"கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திக்குப்பம் பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளியில், NCC திட்டத்திற்கு மாணவர்களை தயார்ப்படுத்துவற்கான முகாம் பள்ளி நிர்வாகத்தால் நடத்தப்பட்டது. இந்த முகாமில், போலியான பயிற்றுநர்கள் கலந்துகொண்டு, அங்கு பயிலும் மாணவிகள் சிலரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளனர். 


இதுவரை 11 பேர் கைது


இந்த சம்பவம் தொடர்பாக, பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட NCC பயிற்றுநர்கள் ஆறு பேரில், ஐந்து பேரும், இந்த சம்பவத்தைக் காவல்துறைக்குத் தெரிவிக்காமல் மறைத்த பள்ளியின் நிர்வாகத்தினர் நான்கு பேரும் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், வழக்கின் முக்கிய எதிரி சிவராமனுக்கு அடைக்கலம் கொடுத்து போலீஸாரின் கைது நடவடிக்கைக்கு எதிராக செயல்பட்ட இரு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்" என போலீஸாரின் கைது நடவடிக்கை குறித்து குறிப்பிடப்பட்டள்ளது.


மேலும் படிக்க | கிருஷ்ணகிரி பாலியல் துன்புறுத்தல்; 11 பேர் கைது - கலெக்டர் கொடுத்த விளக்கம்


மேலும், இந்த சம்பவம் குறித்து விரைவாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. "மேற்கூறிய போலியான NCC பயிற்றுநர்கள் இதே போன்று, மேலும் சில பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இத்தகைய பயிற்சி வகுப்புகளை மேற்கொண்டதாகத் தெரியவந்துள்ளது. இந்தப் பள்ளிகள், கல்லூரிகளிலும் மேற்கூறிய பாலியல் அத்துமீறல்கள் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


சிறப்பு புலனாய்வு குழு 


இந்த சம்பவங்களைப் பற்றி முழுமையான விசாரணையை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் நடவடிக்கைகளை எடுக்கும் வகையில், காவல்துறை தலைவர் (டிஜிபி) பவானீஸ்வரி ஐபிஎஸ் தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு (SIT) ஒன்றை அமைத்திட முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணையை துரிதமாக மேற்கொண்டு, 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 


பல்நோக்கு குழு அமைப்பு


இதுபோன்ற சம்பவங்கள் எதிர்லாகத்தில் நடைபெறாமல் தடுக்கும் விதமாகவும் முக்கிய முடிவு ஒன்றை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. "மேலும், இந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களோடு கலந்தாலோசித்து, அவர்களின் நலன் காத்திட தேவையான நடவடிக்கைகள் குறித்தும், இந்த சம்பவம் ஏற்படக் காரணமாக இருந்த சூழ்நிலைகள் குறித்து ஆராய்ந்து, இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுப்பது குறித்தும், உரிய பரிந்துரைகளை அளித்திட, சமூகநலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஐஏஎஸ் தலைமையில் ஒரு பல்நோக்கு குழு (Multi Disciplinary Team – MDT) ஒன்றை அமைத்திடவும் ஆணையிட்டப்பட்டுள்ளது. 


60 நாள்கலில் குற்றப் பத்திரிகை


இக்குழுவில், மாநில சமூக பாதுகாப்பு ஆணையர் ஜானி டாம் வர்கீஸ் ஐஏஎஸ், பள்ளிக்கல்வி இயக்குநர் லதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்த், மனநல மருத்துவர்கள் பூர்ண சந்திரிகா மற்றும் சத்யா ராஜ், காவல்துறை ஆய்வாளர் லதா, குழந்தைகள் பாதுகாப்பு ஆர்வலர் வித்யா ரெட்டி உறுப்பினர்களாக இருப்பார்கள். 


மேற்கூறிய சம்பவம் குறித்த விசாரணையை 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்ட நிலையில், வழக்குகளின் விசாரணையை விரைந்து முடித்து 60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, கடும் தண்டனையை பெற்றுத்தர வேண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | ஆவின் தொழிற்சாலையில் சோகம்! ஷால் சிக்கியதால் இளம் பெண்ணின் தலை துண்டானது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ