இறைச்சிக்காக மாடுகளை விற்கதடை விதித்ததை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இறைச்சிக்காக மாடுகள், எருமை, ஒட்டகம், காளைகளை விற்க மத்திய அரசு தடை விதித்திருந்தது. இந்த தடை உத்தரவுக்கு கேரளா, புதுச்சேரி, கர்நாடகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், தடையை அமல்படுத்த மாட்டோம் எனவும் அறிவித்துள்ளனர்.


இந்நிலையில் இதைக்கண்டித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.


ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றிய மு.க.ஸ்டாலின்:-


மாட்டிறைச்சி விற்க தடை விதித்து 8 நாட்கள் ஆகின்றன. இந்த தடை உத்தரவிற்கு பிற மாநில முதல்வர்கள் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல் அமைச்சர் தடை உத்தரவை முழுமையாக படித்து பார்த்து விட்டு கருத்துக் கூறுவதாக ​கண்டத்திற்குரியது. இந்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால் மெரினா புரட்சி போன்று மற்றொரு புரட்சி உருவாகும்.


மத்திய அரசு கால்நடை சந்தைக்கான கட்டுப்பாடு சட்டத்தை திரும்ப பெற்றிட வேண்டும் என்று வலியுறுத்தினார். பிரதமர் மோடி விரும்புவதை தான் நாம் சாப்பிட வேண்டுமா? இந்திய அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ள தனிமனித உரிமை பறிக்கபப்டுவதாக கூறினார்.