சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது திமுக. தமிழக முதல்வராக பதவி ஏற்க இருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தன் சமூக வலைத்தள பக்கத்தில் ஊடகத் துறையை பாராட்டியிருப்பது இத்துறைக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது என்றால் அது மிகையாகாது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மு.க. ஸ்டாலின், பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களே என அறிவித்துள்ளார். தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள செய்தியில், ''மழை - வெயில் - பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து செய்தித்தாள்கள், காட்சி - ஒலி ஊடகங்களில் பணியாற்றி வருகின்ற ஊடகத் துறையினர் அனைவருமே தமிழகத்தில் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவர். முன்களப் பணியாளர்களுக்குரிய உரிமைகள் - சலுகைகள் அவர்களுக்கும் உரிய முறையில் வழங்கப்படும்'' என்று எழுதியுள்ளார். 


மழை - வெயில் - பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து செய்தித்தாள்கள், காட்சி - ஒலி ஊடகங்களில் பணியாற்றி வருகின்ற ஊடகத்...

Posted by M. K. Stalin on Monday, 3 May 2021

ALSO READ: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மே 7ம் தேதி முதல்வராக பதவி ஏற்கிறார்


மு.க. ஸ்டாலின் (MK Stalin) வரும் 7-ம் தேதி தமிழக முதலைமைச்சராக பதவியேற்கவுள்ளார். இந்த நிலையில் அவர் ஊடகத் துறை குறித்த இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். 


கொரோனா தொற்றின் (Coronavirus) இரண்டாவது அலை நாடு முழுவதும் தீயாய் பரவி வருகிறது. சென்ற ஆண்டு இந்தியாவில் கொரோனா தொற்று துவங்கியதிலிருந்து மருத்துவர்கள், காவலர்கள் சுகாதாரப் பணியாளர்கள், அரசாங்க அலுவலர்கள் என அனைவரும் தங்கள் வாழ்க்கையை ஆபத்தில் இட்டு மக்கள் நலனுக்காக போராடி வருகின்றனர்.


எனினும், இந்த கொரோனா காலத்தில், மற்றொரு துறையும் இரவு பகல் பாராமல் களத்தில் நின்று தன் பணியை செவ்வனே செய்து வருகின்றது. நாட்டின் கொரோனாவின் நிலையை மக்களுக்கு கொண்டு செல்லும் ஒரு பாலமாக இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் பத்திரிகை துறை ஊழியர்களை பலரும் மறந்து விடுவது பொதுவான ஒரு விஷயமாகும். எனினும், இது பற்றியெல்லாம் கவலைக் கொள்ளாமல், தொடர்ந்து தங்கள் கடமையை ஆற்றிக்கொண்டிருக்கும் ஊடக ஊழியர்கள் பாராட்ப்பட வேண்டியவர்கள் என்பதி எந்த சந்தேகமும் இல்லை.


ALSO READ: மே 6 முதல் தமிழகத்தில் புதிய கோவிட் கட்டுப்பாடுகள்: எதற்கு அனுமதி உண்டு? எதற்கு இல்லை?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR