கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, மக்களுக்கு நேரில் ஆறுதல் கூறினார்.
வங்கக் கடலில் உருவான கஜா புயல் தமிழகத்தின் நாகை மற்றும் வேதாரண்யம் பகுதிகளுக்கு இடையே கரையை கடந்தது. கஜா புயல் தாக்கியதால் டெல்டா மாவட்டங்களாக தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் கடலூர் ஆகிய மாவட்டங்கள் மிகக்கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன. புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும் குறிப்பிடத்தக்க அளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பாதிக்கபட்ட பகுதிகளில் மீட்பு, சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விதித்துள்ளது.
அதிதீவிரமாக வீசிய கஜா புயலால் நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 30 கிராமங்கள் முழுவதும் மிக மோசமாக பாதிக்கபட்டு உள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. மின்கம்பங்கள், செல்போன் கோபுரங்கள், டோல்-கெட் என எதுவும் தப்பவில்லை. 30 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்தன. 40-க்கு மேற்ப்பட்ட மரங்கள் சேதமடைந்தன. 12 ஆயிரம் குடிசைகள் நாசமாயின. ஏராளமான விலங்குகளும் பலியாகியுள்ளன.
வீடுகளை இழந்தவர்கள் மற்றும் புயலால் பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கபட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெறு வருகிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுக்கள் அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
நேற்று கஜா புயலால் பாதிக்கப்பட்டவோருக்கு அரசுடன் சேர்ந்து திமுக தொண்டர்கள் ராணுவ வீரர்கள் போல நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் மக்களுக்கு துணை நிற்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு கட்டளையிட்டார் மு.க. ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.