விரைவில் ஊரடங்குக்கு முற்றுப்புள்ளி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை சற்று குறைந்துகொண்டிருக்கும் இவ்வேளையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதை குறித்து மக்களிடம் விரிவாக பேச தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
சென்னை: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை சற்று குறைந்துகொண்டிருக்கும் இவ்வேளையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதை குறித்து மக்களிடம் விரிவாக பேச தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் மிக அதிகமாக பதிவாகிக்கொண்டிருந்த ஒரு நாள் தொற்று கடந்த சுமார் 10 நாட்களாக வீழ்ச்சியைக் கண்டு வருகின்றது. தற்போதிருக்கும் அளவும் அதிகம்தான் என்றாலும், தொற்றின் அளவு குறைந்துகொண்டிருப்பது சற்று நிம்மதியை அளித்துள்ளது.
இதற்கிடையில் மக்களிடம் கொரோனா (Coronavirus) விதிமுறைகளை பின்பற்றுவதன் அவசியம் குறித்தும், ஊர்டங்கால் ஏற்படும் நன்மை குறித்தும், ஊரடங்கை கடுமையாக பின்பற்றினால், விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்பது பற்றியும் முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் கூறியுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்:
- அனைவரும் உங்களையும் பாதுகாத்துக்கொண்டு மற்றவர்களையும் பாதுகாப்பாக இருக்க விடுங்கள். தொற்று பரவும் சங்கிலியை உடைக்க உதவுங்கள்.
- ஊரடங்கைத் தொடர்ந்து சென்னை உட்பட பல இடங்களில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து கொண்டு இருக்கிறது.
- கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கைத் தவிர வேறு வழி இல்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
- ஊரடங்கால் ஏற்படும் அசவுகரியம் காரணமாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சரி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
- ஊர்டங்குக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைகக் வேண்டும், அது மக்கள் கையில்தான் உள்ளது.
- கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பல உள்கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு செய்து வருகிறது.
- தற்போது ஆக்சிஜன், மருத்துவமனை படுக்கைகள் ஆகியவற்றுக்கான கட்டுப்பாடு நீங்கிவிட்டது.
- மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், நோயாளிகள் முன்கள வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்கவே நான் முழு பாதுகாப்புடன் கொரோனா வார்டுக்கு சென்றேன்.
- நம் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும் கொரோனா தடுப்புச்சுவரை நாம் உடைத்தெரிய வேண்டும்.
- நிகழ்கால சோகத்திலுருந்து மீண்டு, எதிர்கால புத்துணர்வை தமிழக மக்கள் அனைவரும் பெற வேண்டும்.
ALSO READ: தமிழகத்தில் ஜூன் 3-5 வரை தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தம்: காரணம் இதுதான்
இதற்கிடையில், தொற்றை கட்டுக்குள் கொண்டு வர அரசு பல வித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மெ 24 முதல் 31 ஆம் தெதி வரை அமலில் இருந்த ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு எதிரான மிகப் பெரிய அயுதம் தடுப்பூசிதான் (Vaccine) என்பதால், தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரமாக நடந்துண்டு இருக்கிறது. தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்துகொண்டிருக்கும் வேளையில், ஏற்கனவே இருந்த தடுப்பூசி தட்டுப்பாடு இன்னும் அதிகமாகியுள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளதாக அரசும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக, ஜூன் 3 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று தெரிவித்தார்.
நேற்று தமிழகத்தில் (Tamil Nadu), 27,936 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,39,716 ஆக உயர்ந்துள்ளது. நேற்று தமிழகத்தில் தொற்று பாதிப்பால் 478 பேர் உயிர் இழந்தனர். சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 3,01,781 ஆக உள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR