திமுக - மதிமுக கூட்டணி குறித்து ஸ்டாலின் தான் கூறவேண்டும்!
திமுக-வுடன் மதிமுக கூட்டணி அமையுமா, இல்லையா என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் தான் தெளிவுபடுத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்!
திமுக-வுடன் மதிமுக கூட்டணி அமையுமா, இல்லையா என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் தான் தெளிவுபடுத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்!
திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வர் இருக்கையில் எப்படியும் அமரவைக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முழுமுயற்சியில் இறங்கியுள்ளார். இந்நிலையில், தேர்தல் தேதி அறிவித்தப் பின்னரே கூட்டணி பற்றி பேச முடியும் என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
துரைமுருகனின் இந்த பேச்சு வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட மற்ற கூட்டணி தலைவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இது குறித்து கூறுகையில், ‘துரைமுருகன் கூறியதை யாரும் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது. புதுச்சேரியில் உள்ளது போல் தமிழகத்திலும் திமுக காங்கிரஸ் வலுவாக உள்ளது’ என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், திமுக-வுடன் மதிமுக கூட்டணி உள்ளதா இல்லையா என்பதை திமுக தலைவர் சொல்லட்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த வைகோ தெரிவிக்கையில்... "திமுக-வுடன் மதிமுக கூட்டணி இல்லை என்று துரைமுருகன் அவருடைய கருத்தை சொல்லிவிட்டார். அவரது இந்த பேச்சு மதிமுக-வினரை கலங்கடித்துள்ளது. இனி திமுக கூட்டணியில் மதிமுக உள்ளதா இல்லையா என்பதை ஸ்டாலின் தான் கூற வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.