பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் இன்று மாலை நாகர்கோவிலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டதிதல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"இன்னும் சில வாரங்களில் இந்தியாவின் பிரதமர் ராகுல் காந்திதான் என்பதை நான் உறுதியாக சொல்கிறேன். இதன் காரணமாக தான் பிறர் சொல்வதற்கு முன் பிரதமர் வேட்பாளர் ராகுல்தான் என்று கூறினேன்.


பிரதமர் நரேந்திர மோடி பார்க்கக் கூடிய ஒரே வேலை அடிக்கல் நாட்டுவது தான். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 155 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். அவரை இரும்பு  பிரதமர் என்கின்றனர். ஆனால் அவர் 'அடிக்கல்' பிரதமர்.



இவ்வளவு காலமாக இல்லாமல், பல ஆண்டுகளுக்கு பிறகு  பெருந்தலைவர் காமராஜர் நினைவு பிரதமர் நரேந்திர மோடிக்கு இப்போது தான் வந்துள்ளது,


பத்திரிகைகளில் இப்போது காமராஜர் படங்களுடன் அவரது விளம்பரங்கள் வெளிவருகின்றன. ஏன் உங்களுக்காக ஓட்டுக் கேட்க உங்கள் கட்சி தலைவர்கள் படம் கிடைக்கவில்லையா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.


தொடர்ந்து பேசிய அவர் தமிழ்நாட்டில் ஒரு பினாமி ஆட்சியை மத்திய அரசு நடத்தி வருகிறது.


தமிழகத்தில் தற்போது நடப்பது வெறும் லஞ்சம், ஊழல் ஆட்சி மட்டுமல்ல, பெண்கள் எல்லாம் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் ஆட்சியாக மாறிவிட்டது. இந்த தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ராகுல் காந்தியை டெல்லியில் சென்று சந்திப்பேன் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.