உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ் ராவத்துக்கு மு.க.ஸ்டாலின் நன்றி
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், தலைவர் கலைஞரின் பெருவிருப்பத்தை ஏற்றும் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் அய்யன் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்த அம்மாநில முதல்வர் ஹரிஷ் ராவத்துக்கு தமிழக மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று திமுக கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
திருவள்ளுவர் சிலை அமைக்க பெரும் முயற்சி எடுத்துக்கொண்ட பா.ஜ.க.,வின் மேலவை உறுப்பினர் தருண் விஜய்யும் பாராட்டி அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.