ஹைட்ரோ கார்பன் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்க நெடுவாசல் சென்ற மு.க. ஸ்டாலின்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கடந்த 15-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் தஙகள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும், இத்திட்டத்தால் வேளாண் விளைநிலங்களும், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறி அங்குள்ள மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் இளைஞர்கள் மற்றும் மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தொடர்ந்து 16-வது நாளாக நடந்து வரும் போராட்டத்தில் சுமார் 70க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு குவிந்து வருகிறது.


போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்க இன்று நெடுவாசலுக்கு சென்று இருந்த ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். போராட்டக்காரர்களுடன் சிறிது நேரம் அமர்ந்து இருந்த ஸ்டாலின் பின்னர் அவர்களிடையே பேசினார். போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்க இன்று நெடுவாசலுக்கு சென்று இருந்த ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். போராட்டக்காரர்களுடன் சிறிது நேரம் அமர்ந்து இருந்த ஸ்டாலின் பின்னர் அவர்களிடையே பேசினார். கொட்டும் மழையில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் பங்கேற்றார் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.


அப்போது அவர் கூறியதாவது:- 


இந்த திட்டத்தை எதிர்த்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக தெரிவித்தார். மேலும் நியாயமாக இந்தப் போராட்டம் நடந்து வருகிறது. மத்திய அரசு விரைவில் முடிவு காண வேண்டும். ஜல்லிக்கட்டுப் போராட்டமாக இருக்கட்டும், ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு போராட்டமாக இருக்கட்டும், எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டி இந்த திட்டத்தை எதிர்த்து தீர்மானம் கொண்டு வரவேண்டும்' என்று தெரிவித்தார்.


இந்த திட்டத்திற்கு மாநில அரசு வழங்க வேண்டிய சுற்றுச்சூழல் சான்றிதழ் மற்றும் வர்த்தக ரீதியிலான அனுமதியை வழங்காது என்று முதல்வர் எடப்பட்டி பழனிச்சாமி தெரிவித்து இருந்தார். ஆனால் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ததாக அறிவிக்க வேண்டும் என்றும், அதுவரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும் நெடுவாசல் கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.