இந்த இக்கட்டான நேரத்தில் மக்களுக்கு எங்கள் முழு ஆதரவையும் வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்
தமிழக அரசு விழைகிறதோ இல்லையோ.. இந்த இக்கட்டான நேரத்தில் நாங்கள் தொடர்ந்து மக்களுக்கு எங்கள் பங்களிப்பையும் முழு ஆதரவையும் வழங்குவோம் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அரசுக்கு துணையாகவும், மக்களுக்கு ஆதரவாகவும் எதிர்க்கட்சியான திமுக (DMK) மற்றும் அதன் கூட்டணிகள் கட்சிகளும் களத்தில் இறங்கி வேலைகளை செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக "அனைத்து கட்சி கூட்டத்தையும் கூட்டி" மக்களுக்கு தேவையான மற்றும் வைரசை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை செய்து, அனைத்து கட்சிகளும் இணைந்து தமிழக நலனை காக்க வேண்டும் என கோரிக்கை வைத்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் "அனைத்துக் கட்சிக் கூட்டம்" கூட்டப்பட வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
அதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ஸ்டாலின் கூறியது..
திமுக தலைவர் கோரிக்கைக்கு பதில் அளித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "அரசியல் எல்லைக் கோடுகளைக் கடந்த அறம் சார்ந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் வைக்கப்பட்ட கோரிக்கையை, “எதிர்க்கட்சிகளைக் கொண்டு கூட்டம் நடத்த இதில் ஒன்றும் கிடையாது. நோய்வாய்ப்பட்டவர்களை குணப்படுத்த உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். நோய்தொற்று இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். இதெல்லாம் மருத்துவம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள். இதில் அனைத்துகட்சி கூட்டம் கூட்டவோ அரசியல் செய்யவோ அவசியமில்லை" எனத் தனது ட்விட்டர் பதிவின் மூலம் முதலமைச்சர் பதில் அளித்திருந்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியது..
"அனைத்து கட்சி கூட்டம்" குறித்து முதலமைச்சர் பழனிசாமியின் பதிலை அடுத்து, அதற்கு கருத்து தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியது, "அனைத்துக்கட்சி கூட்டத்தின் நோக்கம், மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் தமிழக மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதே ஆகும். தமிழக அரசு இதற்கு விழைகிறதோ இல்லையோ, நாங்கள் தொடர்ந்து மக்களின் இந்த இக்கட்டான நேரத்தில் எங்கள் பங்களிப்பையும் முழு ஆதரவையும் வழங்குவோம்" எனக் கூறியுள்ளார்.