MLA தொகுதி மேம்பாட்டு நிதியை 2.5 கோடியில் இருந்து, 3 கோடி ரூபாயாக அதிகரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேலூர் மக்களவை தேர்தல் காரணமாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 10 நாட்கள் முன்னதாக முடிவடையவுள்ளது. இந்நிலையில் இன்றயை கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விதி எண் 110-ன் கீழ் பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.


அந்த வகையில் MLA தொகுதி மேம்பாட்டு நிதியை 2.5 கோடியில் இருந்து, 3 கோடி ரூபாயாக அதிகரித்து அறிவித்துள்ளார்.


சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற ஆண்டு தோறும் சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுகிறது. இந்த நிதிக்காக இதுவரை சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஆண்டு தோறும் தலா 2 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.


இந்த நிதியை உயர்த்துமாறு சட்டமன்ற உறுப்பினர்களிடம் இருந்து தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்தன. இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை 3 கோடி ரூபாயாக அதிகரித்து அறிவித்துள்ளார்.


தொடர்ந்து கூட்டுறவு, பொதுப்பணித்துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் பல அறிவிப்புகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.


குறிப்பாக தமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் இருக்கை அமைக்கப்படும் மற்றும் திருச்சியில் தியாகராஜ பாகவதருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்று அறிவித்துள்ளார்.