MLA கருணாஸ் நீதிமன்ற உத்தரவின் பேரில் வேலூர் சிறையில் அடைப்பு..
சர்ச்சை பேச்சு வழக்கில் கைது செய்யப்பட்ட MLA கருணாஸ் வேலுார் சிறைக்கு மாற்ற சிறை துறை அதிகாரிகள் நடவடிக்கை..!
சர்ச்சை பேச்சு வழக்கில் கைது செய்யப்பட்ட MLA கருணாஸ் வேலுார் சிறைக்கு மாற்ற சிறை துறை அதிகாரிகள் நடவடிக்கை..!
முதலமைச்சர் மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக கருணாஸை, சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி தலைமையிலான 200-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று கைது செய்தனர்.
அதன்பின் அவரை எழும்பூர் நீதிமன்ற நீதிபதியான கோபிநாத் இல்லத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி, கருணாஸ் மீது போடப்பட்ட கொலை முயற்சி வழக்கை ரத்து செய்தார். மேலும் அக்டோபர் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் கருணாஸை வைக்கும்மாறு அவர் உத்தரவிட்டார். இதனையடுத்து கருணாஸ் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சில மணி நேரத்திற்கு பிறகு அவரை வேலுார் சிறைக்கு மாற்ற சிறை துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
முன்னதாக கருணாஸ் மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து முக்குலத்தோர் புலிப்படை அமைப்பினர் தமிழக அரசையும், போலீசாரையும் கண்டித்து சென்னையில் சில இடங்களில் போஸ்டர்களை ஒட்டி இருந்தனர். கலவரத்தை தூண்டும் வகையில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பதாக முக்குலத்தோர் புலிப்படை அமைப்பினர் மீதும், அச்சக உரிமையாளர் மீதும் போரூர், விருகம்பாக்கம், கோயம்பேடு, வடபழனி போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர்.