தமிழகத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் எதிர்வரும் 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பதே தங்கள் கட்சியின் குறிக்கோள் எனவும் கமல் குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., தமிழகத்தில் நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தல் முழுமையான மக்களின் தேர்வாக இருக்க போவதில்லை என்ற உண்மை அனைவரும் அறிந்ததே. இந்த உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மையம் பங்கு பெறுவதால் சொற்பமான முன்னேற்றமே கிட்டும். மாற்றத்தை லட்சியாக கொண்டுள்ள மக்கள் நீதி மையம் அதை தவறை முறையில் கொஞ்சம் கொஞ்சமாக பெறுவதில் எந்த சாதனையும் இல்லை. மக்கள் நீதி மையத்தின் வெற்றிக்கான வித்து சாதுர்யமோ பண பலமோ அல்ல, நேர்மையும் மக்கள் பலமுமே.


இந்த தேர்தலில் மக்கள் பங்கீடு மிகக் குறைவாக இருக்கும் என்பது உறுதியாகி விட்டது. ஊழல் கட்சிகள் தங்களுக்குள் போட்டு கொண்ட வியாபார பங்கீடு மட்டுமே அரங்கேறப் போகிறது என்பதே பகிரங்கப்படுத்தப் படாத நிஜம். மக்கள் நலன் நோக்கிய பயணமாக இந்த உள்ளாட்சி தேர்தல் இருக்கப் போவதில்லை. ஆதலால் மக்கள் நீதி மையம் கட்சியினர் ஏற்கனவே இரு கட்சிகள் எழுதி இயக்கும் அரசியல் நாடகத்தில் எந்த பாத்திரத்தையும் ஏற்க மாட்டோம் என்பதே பிரகடனமாக இருக்க வேண்டும். இதுனே என் ஆசையும் அறிவுரையுமாகும்.


வரும் ஐம்பது வாரங்களில் மக்கள் நலன் பேணி நற்பணிகள் செய்வோம். நாளை பறக்கப் போகும் நம் வெற்றிகொடியே தமிழகத்தின் அன்னக் கொடியுமாகும் என்பதை மக்கள் உணரச் செய்வோம். இதை மக்கள் திண்ணமாக நம்பவும் வைப்போம். 2021 தேர்தலில் ஆட்சியை பிடிப்பதே நம் இலட்சியமாக இருப்பின் வெற்றி நிச்சயம் என குறிப்பிட்டுள்ளார்.