செல்போன் வெடித்து பெண் பலி... சார்ஜ் போட்டு பேசாதீங்க மக்களே!
Tamilnadu Latest: சார்ஜ் செய்யும்போது மொபைலில் பேசியதால் அது வெடித்ததாகவும், அதில் ஏற்பட்ட தீயில் சிக்கி கும்பகோணத்தில் ஒரு பெண் உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Tamilnadu Latest: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ஆடுதுறை விசித்திர ராஜபுரத்தில் வசித்து வருபவர் கோகிலா(32). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தத நிலையில் தனது மகன் பிரகதீஷ்(9) உடன் தனியாக வசித்து வருகிறார்.
இவர் கபிஸ்தலத்தில் பிரகதீஷ் என்ற பெயரில் செல்போன் மற்றும் கடிகாரம் சரி செய்யும் கடையை நடத்தி வருகிறார். வழக்கம்போல கடைக்கு வந்தவர் தனது பணிகளை தொடர்ந்து மேற்கொண்டுள்ளார். அப்போது செல்போனில் சார்ஜ் போட்டபடி அவர் மொபைலில் பேசியதாக கூறப்படுகிறது.
இதில் மின்கசிவு ஏற்பட்டு செல்போன் வெடித்து கடை தீ பற்றி எரிந்தது. கடையின் உள்ளே இருந்த கோகிலா கூச்சலிட அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும் கோகிலா தீயில் சிக்கி உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கபிஸ்தலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | காங்கிரஸா? திமுகவா? என்ற குழப்பத்தில் இருக்கிறார் கமல் - அண்ணாமலை!
செய்யக் கூடாதவை
ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த அறிவுறுத்தல்களை கடைபிடிப்பதன் மூலம் விபத்து நிகழ்வை தடுக்க முடியும். ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கு ஆகியவற்றில் சார்ஜர் அடாப்டர்களை மாற்றவதையும், பகிர்ந்து கொள்வதையும் தவிர்க்கவும். அவர்கள் வெவ்வேறு சக்தி மதிப்பீடுகளைக் கொண்டிருக்கலாம். அதிக மின்னோட்டம் உங்கள் சாதனைத்தை காலப்போக்கில் இது சேதப்படுத்தும்.
அதேபோன்று, உங்கள் ஸ்மார்ட்போனை இரவு முழுவதும் சார்ஜ் செய்ய வைப்பது பாதுகாப்பற்றது. இது அதிக வெப்பத்தை ஏற்படுத்துவதன் மூலம் பேட்டரி ஆயுளைத் தடுக்கிறது. நீங்கள் எழுந்ததும் உங்கள் கைபேசியை சார்ஜ் செய்யலாம். உங்கள் ஸ்மார்ட்போனின் சார்ஜ் மிக விரைவாக முடிந்துவிடுகிறது என்றால், பேட்டரி வீக்கம் அடைந்துள்ளதா என்பதை சரிபார்க்கவும். பேட்டரியை வெளியே எடுத்து ஒரு தட்டையான மேற்பரப்பில் சுழற்றவும். அது நல்ல முறையில் சுழன்றால், அதில் வீக்கம் உள்ளது. உங்கள் பேட்டரியை மாற்ற வேண்டிய நேரம் இது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
சார்ஜ் செய்யும் போது கவனம்
அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்தில் பேட்டரியை வாங்கவும். பிராண்டட் அல்லாத பேட்டரிகளைப் பயன்படுத்த வேண்டாம். அவர்கள் நிலையான பாதுகாப்பு விதிமுறைகளை நிறைவேற்றியிருக்கிறார்களா என்பதை அறிய வழி இல்லாமல் போகும். மலிவான மாற்று பேட்டரி உங்கள் சாதனத்தை சேதப்படுத்தும்.
உங்கள் சாதனம் சார்ஜ் ஆகும் போது தொலைபேசி அழைப்புகளைத் தவிர்க்கவும். இரண்டு செயல்பாடுகளும் வெப்பத்தை உருவாக்குகின்றன. அழைப்புகளை எடுக்க வயர்லெஸ் ஹெட்செட்டைப் பயன்படுத்தவும் அல்லது உங்கள் சாதனம் போதுமான அளவு சார்ஜ் ஆகும் வரை பொறுமையாக இருக்கவும்.
மேலும் படிக்க | புலி போல் தலைவர் இருக்க புலிகேசியின் ஆதரவு எதற்கு! பாஜகவினர் அடித்த போஸ்டர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ