தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழை அல்லது வறண்ட வானிலை நிலவும்
தென் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு. மற்ற மாவட்டங்களில் லேசான மழை அல்லது வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதாவது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை இருக்கும் எனவும், அதேவேளையில் தெற்கு மாவட்டங்களான கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும். மற்ற மாவட்டங்களில் லேசான மழை அல்லது வறண்ட வானிலை நிலவும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையை பொறுத்த வரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலை சற்று குறைந்தே இருக்கும். அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இன்று தமிழகத்தில் தரங்கம்பாடி (நாகப்பட்டினம்), காரைக்கல் மாவட்டம், திருவாரூர் மாவட்டத்தில் கொடவாசல் மற்றும் நன்னிலம், ஆதுதுரை (தஞ்சாவூர்), திருவள்ளூர் மாவட்டமான பொன்னேரி, குமுதிபூண்டி மற்றும் மணல்மேடு ( நாகபட்டினம்) போன்ற பகுதிகளில் 1 செ.மீ மழை பதிவாகி உள்ளது.