எந்தெந்த இடங்களில் மழை: இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
கடந்த 16 ஆம் தேதி தமிழகத்தின் வேதாரண்யத்தில் கரையை கடந்த கஜா புயல் பேரழிவை ஏற்படுத்திச் சென்ற நிலையில், அதைத்தொடர்ந்து காற்றதழுத்த தாழ்வு மற்றம் மேலடுக்கு சுழற்றி காரணமாகவும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில், இந்நிலையில், நாளை தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வும் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிகவும் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. அது இன்று சற்று மாறும்.
வடகிழக்கு பருவமழை காலங்களில் கிழக்கு திசைக்காற்று வலுப்பெற்று வருவதன் காரணமாக கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வரும் 24மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதே சமயம் நாளை கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் எங்கும் மழை பதிவாகவில்லை எனவும், அந்த மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.