தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, தேனி, திண்டுக்கல்,  கோவை, திருப்பூர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.


வெப்ப நிலையை இயல்பு நிலையில் இருப்பதால் வெப்பச்சலனத்தால் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழைக்கான வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள திண்டுக்கல், நீலகிரி, தேனி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 


தென் மேற்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை திரும்பப்பெறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 6 சென்டிமீட்டரும், தேனி மாவட்டம் பெரியாறில்  4 சென்டிமீட்டரும், கோவை மாவட்டம் வால்பாறையில் 2 சென்டிமீட்டரும், நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 1 சென்டிமீட்டரும், மழை பதிவாகியுள்ளது.