மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டும், மானிய விலை ஸ்கூட்டர் வழங்குவதற்காகவும் பிரதமர் மோடி தற்போது, சென்னை விமான நிலையத்திற்கு வருகை புரிந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடுத்த இரண்டு நாட்களில் பிரதமர், சென்னை, புதுச்சேரி, குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் செய்ய உள்ளார்.


அதற்காக இன்று காலை 11:45 மணியளவில் குஜராத்தின் சூரத் நகருக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தடைந்தார். அங்கு பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுக்கு அவர் சான்றிதழ்களை வழங்ககினார்.


பின்னர், சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தை தொடங்கி வைக்க தற்போது, சென்னை விமான நிலையத்திற்கு வருகை புரிந்துள்ளார்.



சென்னை வந்த பிரதமர் மோடியை பொன்.ராதாகிருஷ்ணன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மைத்ரேயன் எம்.பி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், எம்.பி.நவநீதகிருஷ்ணன் வரவேற்றனர்.


இதேபோல் நாளை புதுச்சேரி ஆரோவிலில் நடைபெறும் நிகழ்விலும் பங்கேற்கிறார். இதற்கான முழுப்பயண விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.


அதையடுத்து, அரவிந்தர் ஆசிரமத்தில் நடைபெறும் வழிபாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தியானம் செய்கிறார். பின்னர் ஆரோவில் சர்வதேச நகர் பொன்விழா நிகழ்ச்சி மற்றும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு மாலையில் விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.