3 தொகுதி இடைத்தேர்தல்: இறுதி பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் தஞ்சாவூர் , அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் இந்த மாதம் நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. மூன்று தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை இந்த மாதம் 22-ம் தேதி நடைபெறும். இந்த 3 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் அக்டோபர் 26-ம் தேதி தொடங்கியது.
சென்னை: தமிழகத்தில் தஞ்சாவூர் , அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் இந்த மாதம் நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. மூன்று தொகுதிக்கும் வாக்கு எண்ணிக்கை இந்த மாதம் 22-ம் தேதி நடைபெறும். இந்த 3 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் அக்டோபர் 26-ம் தேதி தொடங்கியது.
வேட்புமனு தாக்கல், பரிசீலனை மற்றும் வேட்பு மனுவை திரும்பப் பெறுதல் நடைமுறை முடிந்த பின்னர் இன்று இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
தஞ்சை, அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு இன்று கடைசி நாள் ஆகும். அதன்படி, தஞ்சையில்,14 பேர், திருப்பரங்குன்றத்தில், 28 பேர், அரவக்குறிச்சியில், 39 பேர் என மொத்தம் 81 பேர் போட்டியிடுகின்றனர். இதனையடுத்து வருகிற 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.