எதிர்வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் மற்றும் மாநில நிர்வாகிகள் நேரில் சந்தித்து, நடைபெறவிருக்கும் மாக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றி பெற அமோக ஆதரவு அளிப்பதோடு, திமுக கூட்டணி வெற்றி பெற பாடுபடுவதாகவும் உறுதி அளித்தார்.


இந்நிகழ்வின் போது கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., ஆகியோர் உடனிருந்தனர்.


நாடுமுவதும் மக்களவை தேர்தல் இம்மாதம் 11-ஆம் நாள் துவங்கி, மே 19 வரை, ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில், தேர்தல் ஆணைய அதிகாரிகள் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றனர்.


நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்காக நாடு முழுவதும் 10.35 லட்சம் ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில், உபரி இயந்திரங்களையும் சேர்த்து, 39.6 லட்சம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், 17.4 லட்சம் ஒப்புகை சீட்டு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மறுபுறம் அரசியல் கட்சி தலைவர்கள் முழுவீச்சில் வேட்பாளர் பெயர் அறிவித்தல், பிரச்சாரம் மேற்கொள்ளுதல் என முழு வீச்சில் பணியாற்றி வருகின்றனர்.