சென்னை: வரும் பொங்கள் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் சென்னைவாசிகளுக்கு ஏதுவாக 14,423 சிறப்பு பேருந்துக்கள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் பிற மாவட்டங்களில் இருந்து 10,000-க்கும் அதிகமான சிறப்பு பேருந்துக்களை இயக்கவும் தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சிறப்பு பேருந்துகளின் மிகுதியால் சுங்கச்சாவடிகளில் பேருந்து நெரிசல்களை தடுக்க தனி வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவம் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி இன்று துவங்கி, வரும் 14-ஆம் நாள் வரை தமிழகம் முழுவதம் இயக்கப்படுகிறது.. இதற்கான முன்பதிவு கடந்த ஜனவரி 9-ஆம் நாள் துவங்கியது. சென்னை கோயம்பேட்டில் உள்ள சிறப்பு முன்பதிவு மையத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்பதிவினை தொடங்கிவைத்தார். 


பொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவிற்காக கோயம்பேட்டில் 26 மையங்களும், தாம்பரம் சானடோரியத்தில் 2 மையங்களும், பூந்தமல்லி மற்றும் மாதவரத்தில் தலா ஒரு மையமும் என மொத்தம் 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


www.tnstc.in, www.redbus.in, www.paytm.com, www.busindia.com ஆகிய இணையதளங்கள் மூலமும் டிக்கெட்கள் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.